கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

*கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்உத்தரகாண்டாஎனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.* தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்– ‘கர்நாடக சக்கரவர்த்திடாக்டர் சிவராஜ்குமார் மற்றும்நடராக்ஷசாடாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும்உத்தரகாண்டாஎனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகதுர்கிஎனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். *********

ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் கிரேட் இந்தியன் கிச்சன்‘, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்‘, ‘வடசென்னை‘, தேசிய விருது பெற்ற படமானகாக்கா முட்டை‘, ‘ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்‘, ‘ டக்ஜகதீஷ்‘, ‘வானம் கொட்டட்டும்என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போதுமுன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

உத்தரகாண்டாபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடாமற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில்உருவாகி வரும்உத்தரகாண்டாதிரைப்படத்தில்கர்நாடக சக்கரவர்த்திசிவராஜ்குமார், ‘நடராக்ஷசாடாலிதனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப்கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.