கார்த்தியின் கிராம தோற்றத்தை மாற்றிய லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது பையா.  பருத்திவீரன் படத்திற்குப் பின் கார்த்தியின் கிராம தோற்றத்தை மாற்றிய படம் என்கிற பெருமையைக் கொண்டது பையா. பருத்திவீரன் என்ற கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்த கார்த்தியை மிகப்பெரிய அளவில் நகரத்து நாயகனாக ’பையா’ படம் வெளிப்படுத்தியது. மேலும் தமன்னாவுடனான காதலை வெளிப்படுத்த முடியாமல் தன்னுடைய ஏக்கத்தை சிறப்பாக இந்தப்படத்தின் பல தருணங்களில் வெளிப்படுத்தியிருப்பார் கார்த்தி.******