எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.**********
இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் R. K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் முன்னணி இயக்குநர் H. வினோத்த்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். H.வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இயக்குநராக தனது புதிய பயணத்தை இப்படத்தின் மூலம் தொடங்குகிறார்.

