ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார்

ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்தில்  கவனம்ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சம்பத் நந்தி திரைக்கதையில் அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் சார்பில்  கீழ் டி மது தயாரிக்கிறார். இதன் வழக்கமான படப்பிடிப்பு காசியில் துவங்கியது. இப்படத்தில் தமனாவுடன் ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன்விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.********

ஒடேலா 2’ கதை பல கோணங்களையும் ஆழமான வேர்களையும் கொண்டது. இதன் சீக்வல் கதைகிராமம், அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரிய மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலாமல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார்என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் தங்கள்பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது சிவபெருமானின் திரிசூலத்தைக் காட்டுகிறது. அவர்மல்லண்ண சுவாமியாகவும் வணங்கப்படுகிறார். எண் 2, திரிசூலம் மற்றும் மூன்று கோடிட்ட விபூதி, அதன்மேல் உள்ள சிவப்பு ஆகியவை சிவலிங்கத்தை நாம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையில் இடம்பெறும் ஆன்மீக விஷயத்தைக் குறிப்பதாக இது உள்ளது.

ஹெபா படேல், வசிஷ்டா என் சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தக்கதையில் விஎஃப்எக்ஸ் முதன்மையானதாக இருக்கும். அதே நேரத்தில்ஒடேலா 2’வில் அனைத்துப்பிரிவிகளையும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கவனித்துக் கொள்வார்கள். சௌந்தர் ராஜன் எஸ்ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாராபுகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் கலைஇயக்குநர். மேலும், படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான விவரம் விரைவில்வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு: தயாரிப்பாளர்: டி மது, திரைக்கதை: சம்பத் நந்தி, பேனர்: மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ், இயக்குநர்: அசோக் தேஜா, ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன். எஸ், இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத், கலை இயக்குநர்: ராஜீவ் நாயர், மக்கள் தொடர்பு: ரேகா, மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ