சமீப படங்களில் ஆகச் சிறந்த படம் “ஜெ. பேபி”

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில்  ஊர்வசி, தினேஷ், லொள்ளு சபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜெ பேபி. வீட்டை விட்டு ஓடிய மனநலம் குன்றிய அம்மாவை திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவதுதான் படத்தின் கதை. படத்தின் ஆரம்ப முதல் இறுதிகட்டம் வரை ரசிகர்களை குதுகுலகமாக வைத்திருந்த  இயக்குனர் சுரேஷ் மாரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  நடிகை ஊர்வசி ஆரம்பம் முதல் இறுதி கட்டம் வரை நடிக்கும் காட்சிகள் நமது அனைவரையும் வயிர் குலுங்க சிரிக்க வைக்கிறது. அத்துடன் தாய்பாசத்தை  காற்றாற்று வெள்ளம் போல் திரையில் ஓடச்  செய்திருக்கிறார்.  அண்ணன் தம்பிகளாக வரும் தினேஷ், லொள்ளு சபா ஆகியோரின் நடிப்பு அனைவரையும் நகைச்சுவையுடன் கவர்கிறது. ஒருவருக்கொருவர் நடிப்பில் போட்டி போடுகிறார்கள். திரைக்கதையை அழகிய சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்  சுரேஷ் மாரி.  இது ஒரு உண்மை சம்பவம் என்று திரையில் காட்டும் போது ரசிகர்களின் கண்கள் கலங்குகின்றன. சமீபகால படங்களில் ஆகச்சிறந்த படமாக ஜெ.பேபியை  தந்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ்மாரி.