*ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி , தினேஷ், மாறன் நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெ பேபி திரைப்படம்  அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் வயது முதிர்ந்தவர்களின் உளவியல் சிக்கலையும் பேசியிருக்கும் ஜெபேபி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.********

பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும்.  ஜெ பேபி படம்  வழக்கமாக பேசும் எந்த அரசியலையும் பேசாமல் குடும்ப உறவுகளின் உன்னதத்தை பேசும்  விதமாக அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய கருத்தை உள்ளடக்கியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.