இரண்டு வெவ்வேறு தளங்களில் ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும்ஒரு நொடிபடத்தின்முன்னோட்டக் காணொளியை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டார். இந்த படத்தின் காணொளியை சரிகமா மியூசிக் நிறுவனத்தால்  யூடீப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் வெள்ளோட்டக் காட்சியும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது*****

இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில்ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும்.  பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன்தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ்மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும்ஒரு நொடிபடத்தில்தொட்டால் தொடரும்படநாயகனும்அயோத்திபடத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதியபாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர்,  ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவுஇயக்குநராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை  கவனிக்கிறார் எஸ்.ஜே. ராம். அறிமுகஇசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள்பங்களிப்பை பலமாக செய்திருக்கிறார்கள்.

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க  இந்தக் கூட்டணிஒரு நொடிபடத்தின் மூலம்திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.