சென்னையில் புதியதாக பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் ஹப் திறப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் புதிதாக அமைத்துள்ள பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் ஹப்பை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார் . உடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, எஸ்.டீ. கொரியர் நிறுவனத்தின் தலைவர் அன்சாரி, துணை நிர்வாக இயக்குனர் சிராஜுதீன், பிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபூபக்கர் சித்திக், மூன் ட்ரடேர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபூபக்கர் சித்திக், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், துணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.