*விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2

தேசிங்குராஜா”.  10 வருடம் கழித்து மீண்டும் தேசிங்குராஜாஇரண்டாம் பாகத்தை இயக்கிறார் எஸ்.எழில். தேசிங்குராஜாவில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி. ரவிசந்திரன் தயாரிக்கிறார்.  இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில்  ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்படத்தில் நடித்த  பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக  நடிக்கிறார்கள்.********

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும்  சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் s.எழில்.

இவரது படங்களில் காமடி சற்று தூக்கலாகவே இருக்கும். சூரி, யோகிபாபு என ஒரு காமடி பட்டாளமேநடித்திருப்பார்கள். இப்படத்திலும்  அப்படிதான்…  ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளுசபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.  s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்..ராஜ்குமார், யுவன்சங்கர்ராஜா , டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்தபூவெல்லாம் உன் வாசம்படத்திற்கு பிறகு  ஹிட் காம்போவாகவித்யாசாகருடன் மீண்டும்இதில் இணைகிறார். படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர்வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார் ஒளிப்பதிவு: செல்வா.ஆர் எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார் ஆர்ட்: சிவசங்கர் வசனம்முருகன் ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்கார்த்திக் ( Fire Karthik ) நடனம் : தினேஷ் பாடல்கள்:யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம் பி.ஆர்.: ஜான்சன்