தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் பழைய கட்டிடங்கள் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் வீட்டு வசதி வாரிய தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன்அவர்களும்  வீட்டு வசதி வாரியம் சார்பில் மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட இருக்கும் நந்தனம் வீட்டுவசதி வாரிய தாமரை குடியிருப்புகளையும் வாடகைக் குடியிருப்புகளையும் நந்தனத்தில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தையும் இன்று (29.09.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துஆலோசனை வழங்கினர். வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சரவணவேல்ராஜ் .. ., தலைமை வருவாய் அலுவலர் திரு. புண்ணியகோடி, தலைமை பொறியாளர் (நகரம்) கண்ணன், மேற்பார்வைபொறியாளர் லக்ஷ்மி நாராயணன், செயற்பொறியாளர் குமரேசன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் திமுகஇணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.