“குத்தா” திரைப்படம் பத்து மொழிகளில் தயாராகிறது

ஆர்.விஷன்  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில்  மிகுந்த பொருட்செலவில்  வி.சி. வடிவுடையான் கதை, திரைக்கதை அமைத்து தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் படத்திற்குகுத்த ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். பல மொழிகளில் பிரபலமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி, சைனீஸ், ஆங்கிலம், ரஷ்யன் என பத்து மொழிகளில் தயாராகிறது.********

நாயின் வெறித்தனமான ஆக்க்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஃபைட்மாஸ்டரான ராம் லெக்ஷ்மணன் இரட்டையர்கள் இப்படத்தின் சண்டை காட்சிகளை கவனிக்கிறார்கள். படத்தில் அரை மணிநேரம் பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுவதால் அந்த பணியைசைனாவில் உள்ள குக்கியா கவாசி என்ற கிராபிக்ஸ்  நிறுவனம் மேற்கொள்கிறது. அம்ரீஷ் இசையமைக்க,R.ப்ரணவ் ஒளிப்பதிவு செய்ய கலை P. சண்முகம், எடிட்டிங் இளையராஜா, தயாரிப்புநிர்வாகம் G.சங்கர். மக்கள் தொடர்புமணவை புவன்.