‘குடும்பங்கள் கொண்டாட வரும் படம் ‘கங்கணம்’

கங்கணம்என்ற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் கதையின் நாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடித்துள்ளார்.   கதாநாயகிகள்அஸ்வினி சந்திரசேகர்,  பிரணா,. சரவணன், சம்பத்ராம், இயக்குநர் மனோபாலா, ‘விஜய் டிவிராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், ‘கயல்மணி, ‘ராட்சசன்யாசர் , அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கேஜி, பாரிவள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கிமஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை . இசையரசன் இயக்கியுள்ளார்.*********

இப்படத்திற்கு GA சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்டமுந்திரிக்காடுஉட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார். நான்கு  பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். எஞ்சாமிஆல்பம் புகழ் தெருக்குரல் அறிவு, V.M. மகாலிங்கம் ,கயல் கோபு, ஸ்ரீநிஷா ஆகியோர்பாடியிருக்கிறார்கள்.

J. ஜெயபாலன் படத்தொகுப்பு செய்துள்ளார். மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். இப்படத்தில்  பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள்வருகின்றன. நடன இயக்குநர்களாக தினா, ஜாய்மதி பணியாற்றியுள்ளனர்.கலை இயக்கத்தை கல்லை தேவாகவனித்துள்ளார்.