கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் படப்பூஜை

சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும்  ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபலதிரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இயக்குநர்அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்டகோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல்தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.*********

இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்தஎக்கோபடத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும்பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.  முத்து, சந்தோஷ்சிவன் & ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன்கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகஅறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின் கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏஆர் இந்தபடத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவானகேம் ஆன்ரசிகர்கள்மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்த படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில்சமீபத்தில் வெளியானதூக்குதுரைபடம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றதுகுறிப்பிடத்தக்கது. ‘சிவகுமாரின் சபதம்மற்றும்ரவுடி பேபிபடங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக்இதில் எடிட்டராக பணிபுரிகிறார்.

மாஸ்டர்மற்றும் சமீபத்தில் வெளியானலேபிள்வெப் சீரிஸ் ஆகியவற்றில் தனது அபார நடிப்பைவெளிப்படுத்திய மாஸ்டர் மகேந்திரன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சர்வைவல்த்ரில்லராக உருவாகும் இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயேபடமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.