மம்மூட்டி குடும்பத்தில் இணைந்த சாக்‌ஷி அகர்வால்

நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண்வேடத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ்லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் சாக்‌ஷி. தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் படமானசாராவில் பரபரப்பாக நடித்து வருகிறார்.******

மேலும், ‘8 தோட்டாக்கள்புகழ் வெற்றி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், ‘கெஸ்ட் 2′ உட்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.  அழகிய  கதாநாயகியாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்‌ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும்காணலாம்.  இந்த தீபாவளி, நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக,  பான் இந்திய தீபாவளியாக அமைந்துள்ளது.