நடிகை சோபிதா துலிபாலா நடிக்கும் ‘மங்கி மேன்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்மற்றும்தி நைட் மேனேஜர்போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும்பொன்னியின் செல்வன்படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார். அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமானராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன்குரூப்மற்றும் தெலுங்கில்கூடாச்சாரி’, ‘மேஜர்போன்ற படங்களை வழங்கிய சோபிதா, தற்போது தேவ் படேல் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற ஜோர்டான் பீலேவுடன் இணைந்து யுனிவர்சல் பிக்சர்ஸின் தயாரிப்பானமங்கி மேன்என்ற த்ரில்லர் படத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.*****

விப்லாஷ்போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  சமீபத்தில்வெளியிடப்பட்டமங்கி மேன்திரைப்படத்தின் ட்ரெய்லர் உலகம் முழுவதும் உள்ள திரைப்படஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சோபிதா துலிபாலாவின் ஹாலிவுட் அறிமுகம்குறித்த கூடுதல் அப்டேட்டிற்காகக் காத்திருங்கள். தேவ் படேல் இயக்கத்தில், சோபிதா துலிபாலா நடிப்பில் தயாரானமங்கி மேன்எனும் திரைப்படம்எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது