போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்கு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியேவருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து உரியஅனுமதி இல்லாமல் செல்பவர்கள் மீது சட்டபடிநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 560 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுகாவல் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் தணிக்கைசெய்து வருகின்றனர்.   2.​ இன்று (6.6.2021) காலை 7.45 மணியளவில்சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் காவலர்கள் வாகனதணிக்கை செய்து கொண்டிருக்கும் பொழுது, காரில்உரிய அனுமதியின்றி பெண் ஒருவர் முகக் கவசம்அணியாமல் வந்தவரை, காவல்துறையினர் நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பெண்முககவசம் அணியாமல் வந்தமைக்காக ரூ.500  அபராதம்விதித்து ரசீதை மேற்படி பெண்ணிடம் கொடுத்துள்ளனர். உடனே மேற்படி பெண் தனது தாய்க்கு செல்போன் மூலம்தகவல் கொடுத்து சம்பவயிடத்திற்கு வர கூறியுள்ளார். 3.​சம்பவயிடத்திற்கு வந்த பெண், போலிசார் வழங்கியரசீதை வாங்கி கீழே ஏறிந்து விட்டு, முகக் கவசம்அணியாமல் தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்று உரக்கசப்தமிட்டு காவல்துறையினரை பணி செய்யவிடாமல்தடுத்து மிரட்டியுள்ளார். மிரட்டிய பெண் வழக்குறைஞர்தனுஜா கத்துலா, க/பெ.பழனிவேல் ராஜன், கீழ்பாக்கத்தைசேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது குறித்துசம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர், சேத்துப்பட்டுகாவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில்மேற்படி தனுஜா கத்துலா மீது 269, 270, 290, 353, 294 (b)506 (i) இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் படிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது.  4.​தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி முன் களபணியில் இருந்து வரும்  அனைத்து அரசுதுறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள்ஒத்துழைப்புடன் கொரோனா நோய் தொற்றுகுறைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின்நடவடிக்கைகளில் பொதுமக்களிடம் கனிவுடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனகாவல்ஆணையர் உத்தரவு பிறபித்துள்ளார். காவல் துறையினர் 24 மணி நேரமும் 3 பிரிவுகளாக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் பணி செய்துவருகின்றனர்.  5.​மேற்கண்ட வாகன தணிக்கையில் நடைபெற்றசம்பவம் விரும்பதகாத வகையில் நடைபெற்று உள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கத்தினுடையவழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடித்துகாவல்துறையினருக்கு ஊரடங்கை அமல்படுத்துவதற்க்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

போலீசாரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்கு Read More

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார்

பிரதிப்குமார், இ.கா.ப., அவர்கள்சென்னை பெருநகர காவல், போக்குவரத்துகூடுதல் ஆணையாளராக இன்று (05.6.2021)பொறுப்பேற்றுக் கொண்டார்

போக்குவரத்து கூடுதல் ஆணையர் பதவி ஏற்றார் Read More

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார். 

அண்ணா பல்கலைக்கழக  விடுதி  வளாகத்தில்காவல் துறையினருக்கான  கோவிட்-19 கேர்சென்டரில்  கொரோனா தொற்றால்  பாதிப்படைந்துசிகிச்சை பெற்று வரும்  காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை நேற்று (04.06.2021) சென்னைபெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கவச  உடை அணிந்து  நேரில்   நலம் விசாரித்து, ஆறுதல் கூறியும்பழத்தொகுப்புகளையும் வழங்கினார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சையில் இருந்த தலைமைக்காவலர் K.சிகாமணிஎன்பவரது 10 வயது மகளான ஸ்ருதி என்ற பெண்அவரது தாய் தேவியுடன் கொரோனா நோய் தொற்றுசிகிச்சை பெற்று வந்த சிறுமி ஸ்ருதி தான்தனிமைபடுத்தப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்டநிலையிலும் முன்களப்பணியாளர்களாக அரிப்பணிப்புஉணர்வுடன் பணி செய்து மக்களை காத்துவரும்மருத்துவ துறையினர், காவல் துறையினர் மற்றும்சுகாதார அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தான் வரைந்த “THANK YOU WARRIORSSAVING –  OUR LIVES” என்ற வாசகம் கொண்டஓவியத்தை கவச உடையில் ஆறுதல் கூற வந்த காவல் ஆணையரிடம் நேரில் வழங்கி தனது நன்றியைநெகிழ்வுடன் தெரிவித்தார். இந்த ஓவியம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

காவலர் கோவிட் கேர் சென்டரில் தாயுடன்சிகிச்சையிலிருந்த 10 வயது சிறுமி முன்களபணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து வரைந்தஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கி நன்றிகூறினார்.  Read More

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை பொலிசில் ஒப்படைத்தவரை ஆணையர் பாராட்டினார்

  சென்னை, அண்ணாநகர், மேற்குவிரிவாக்கம், ஜீவன்பீமாநகர், எண்.10041 என்றமுகவரியில்வசித்துவரும்ஸ்டாலின்கண்ணா, வ/45,த/பெ.ராமதாஸ்என்பவர்நெற்குன்றத்தில் National Institute of Hotel Management என்றகல்விநிறுவனத்தைநடத்திவருகிறார். ஸ்டாலின்கண்ணாநேற்று (02.6.2021) மதியம்சுமார் 12.15 மணிக்கு, அவரதுகாரில்ஜெ.ஜெ.நகர், TVS காலனி, லோட்டஸ்ரெசிடென்சிஅருகில்சென்றுகொண்டிருந்தபோது, அங்குசாலையில்ரூபாய்நோட்டுக்கட்டுஒன்றுகிடந்ததைகண்டுஎடுத்துபார்த்தபோது, அதில்பணம் ரூ.50,000/- இருந்துள்ளது.  பணத்திற்குஉரிமையாளர்யார்எனதெரியாததால்ஸ்டாலின்கண்ணாஅப்பணத்தைஎடுத்துச்சென்று,  V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில்ஒப்படைத்தார்.இதுபோலR-1 மாம்பலம் காவல் நிலையதலைமைக்காவலர்பிரேம்குமார் (த.கா.26385) என்பவர்இன்று (03.6.2021) அதிகாலைசுமார் 06.30 மணியளவில்ரோந்துபணியில், தி.நகர்சாலையிலுள்ளயூனியன்பேங்க்ஆப்இந்தியாவங்கியின் ATM மையத்தில்தணிக்கைசெய்யசென்றபோது, அங்கு ரூ.10,000/- கேட்பாரற்றுகிடந்துள்ளது. காவலர்பிரேம்குமார்அப்பணத்தைஎடுத்துவிசாரணைசெய்தபோது, யாரும்அப்பணத்திற்குஉரிமையாளர்யார்எனதெரியவில்லை.ஆகவே, தலைமைக்காவலர்பிரேம்குமார்மேற்படிபணம் ரூ.10,000/-ஐR-1 மாம்பலம் காவல் நிலையஆய்வாளரிடம்ஒப்படைத்துஉரியவரிடம்ஒப்படைக்கநடவடிக்கைகள்மேற்கொண்டார். மேற்படிசம்பவங்களில்கீழேகிடந்தபணத்தைகண்டெடுத்துநேர்மையாக காவல் நிலையத்தில்ஒப்படைத்து,மற்றவர்களுக்குமுன்னுதாரணமாகசெயல்பட்டஅண்ணாநகரைச்சேர்ந்தஸ்டாலின்கண்ணாமற்றும்R-1 மாம்பலம் காவல் நிலையதலைமைக்காவலர்பிரேம்குமார்ஆகியோரை, சென்னைபெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்இன்று (03.6.2021) நேரில்அழைத்துபாராட்டிவெகுமதிவழங்கிகௌரவித்தார். இதுவரையில்பணம்இழந்தவர்கள்குறித்தவிவரம்கிடைக்கப்பெறவில்லை.எனவே, பணத்தைஇழந்தவர்கள்உரியசான்றுகளுடன்V-3 ஜெ.ஜெ.நகர்மற்றும் R-1 மாம்பலம் காவல் நிலையஆய்வாளர்களிடம்தொடர்புகொண்டுபெற்றுக்கொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை பொலிசில் ஒப்படைத்தவரை ஆணையர் பாராட்டினார் Read More

பாலியல் புகார் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையரின் துரித செயல்பாடு

சென்னையில் உள்ள பள்ளிகளில் இருந்து வரும் பாலியல் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதற்கென துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடைபெற்று வருகின்றது.  மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் …

பாலியல் புகார் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையரின் துரித செயல்பாடு Read More

திருடர்களை மடக்கிப் பிடத்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

அண்ணாநகரில் சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை மடக்கிப் பிடித்த ரோந்துவாகன காவலர் மற்றும் ஊர்க்காவல்படை வீரரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, நியூ ஆவடி சாலை, டாக்டர் அம்பேத்கர் நகர், 99வது பிளாக்கில் வசித்து …

திருடர்களை மடக்கிப் பிடத்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு ஆணையர் பாராட்டி ஒஅரிசு வழஃங்கினார்

ஜெ.ஜெ.நகர் பகுதியில் சாலையில் கிடந்த பணம் ரூ.50,000/-ஐயும், மாம்பலம் பகுதியில்ATM மையத்தில் கிடந்த பணம் ரூ.10,000/-ஐயும் நேர்மையாக காவல் நிலையத்தில்ஒப்படைத்தவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கிபாராட்டினார். சென்னை, அண்ணாநகர், மேற்கு விரிவாக்கம், ஜீவன் பீமா நகர், எண்.10041 என்ற முகவரியில்வசித்து …

கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு ஆணையர் பாராட்டி ஒஅரிசு வழஃங்கினார் Read More

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீஸ் தீவிரம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். நடிகை சாந்தினி அளித்த புகாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீஸ் தீவிரம் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களை ஆணையர் நலம் விசாரித்தார்

எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும்,மருத்துவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் கேட்டறிந்துமருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.​ சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் …

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களை ஆணையர் நலம் விசாரித்தார் Read More

பல்வேறு  வழக்குகளில் தொடர்புடையபிரபல ரவுடி மணிகண்டன் (எ) C.D மணி  கைது .

  சென்னை பெருநகர காவல்  சரகத்தில்  சட்ட விரோத செயல்களை தடுத்திடவும், உரியகண்காணிப்பு செய்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்யசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள்உத்தரவிட்டதின்பேரில், 12 காவல் மாவட்டங்களில் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில்தனிப்படைகள் …

பல்வேறு  வழக்குகளில் தொடர்புடையபிரபல ரவுடி மணிகண்டன் (எ) C.D மணி  கைது . Read More