தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (17.10.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட …

தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு Read More

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 5.10.2021 அன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என். அரங்கத்தில், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்து சமய …

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Read More

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.97.49 இலட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் 5.10.2021 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்ரூ.97.49 இலட்சம்  மதிப்பீட்டிலான கலையரங்கம், மைதானம் மற்றும் பூங்காவைதிறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக செயல்படவுள்ள அரசு கலைக்கல்லூரிக்கான கட்டடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். …

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.97.49 இலட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.9.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6,00,926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட …

சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பவிளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும்நோக்கத்திலும், ஒன்றிய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றியஅரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து“புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான“விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினைசேர்த்துள்ளது.  தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றியஅரசால்   அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குபெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக்கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள்மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலைஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்றுஇருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும்,கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாதுஇடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்துசிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியவிளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது Read More

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 16.9.2021 அன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்திருச்செந்தூர்– அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில்நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதுவக்கி வைத்தார். இறையருள் பெற திருக்கோயில்களுக்குவருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதேஅன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில்754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம்வழங்கப்பட்டு வருகிறது. முந்தையகாலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம்ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்துவந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனாபெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின்பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள்சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமானமுறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட,இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல்ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்துமுதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.  தற்போது, பழநி – அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், திருவரங்கம் – அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெறவேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமயஅறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்திருச்செந்தூர் – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில், சமயபுரம் – அருள்மிகு மாரியம்மன்திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றுதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத்திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.       இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளிமாவட்ட ஆட்சித் தலைவர்  சு. சிவராசு, இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகியதிருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் Read More

நீட்’ தேர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர் கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை

நீட்’ சம்பந்தமாக இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த மசோதாவினை வரவேற்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.  அதற்காக உள்ளபடியே நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்மானம் வந்தபோதும், அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், அரசியல் பார்க்காமல் நாங்களும் ஆதரித்தோம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதேபோல, ‘நீட்’-க்காகக் …

நீட்’ தேர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எதிர் கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரகநாடுகளைச் சேர்ந்த DP World குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும்கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2000 கோடி ரூபாய்முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவுமையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடுஅரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டது.      ​ தமிழ்நாட்டில், ஏற்கனவே DP World குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 நபர்களுக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில்கன்டெய்னர் முனையங்கள் (Container Terminal), கன்டெய்னர் சரக்கு நிலையங்கள் (Container Freight Stations), சுங்கக் கிடங்குகள் (Bonded Warehouses), குளிர் பதனக் கிடங்குகள் (Cold Storages), உள்நாட்டுக்கிடங்குகள் (Domestic Warehouses) போன்ற பலஉள்கட்டமைப்பு வசதிகளை  நிறுவி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.     ​இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறைஅமைச்சர்  தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில் துறைமுதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர்  பூஜா குல்கர்னி, இ.ஆ.ப., DP World நிறுவனத்தின்மேலாண்மை இயக்குநர் திரு. ரிஸ்வான் சூமர், தலைமைநிர்வாக அதிகாரி  திரு. ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது Read More

பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளிகளுக்கு ரூ.10000 நிவாரணத் தொகை – முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே மாண்புமிகு உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தரவேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்.  நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல; இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் – ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய …

பிள்ளையார் சிலை செய்யும் தொழிலாளிகளுக்கு ரூ.10000 நிவாரணத் தொகை – முதல்வர் ஸ்டாலின் Read More

வீடுகளில் பிள்ளையாரை வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கலாம் – அமைச்சர் சேகர்பாபு

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிபர்களிடம் கூறும்போது வீடுகளில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு நீர் நிலைகளில் கரைக்கலாம் என்று தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடத்த கொரோனா தொற்று காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை. இது மாநில …

வீடுகளில் பிள்ளையாரை வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கலாம் – அமைச்சர் சேகர்பாபு Read More