“வணக்கம் பண்ணையார்” திரைப்படம் *சித்தார்த் அபிமன்யு* தயாரிப்பில் உருவாகியுள்ளது. கரு துரைராஜன்* இயக்கி இசையும் அமைத்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை *ராஜசேகர் நாயுடு,யாசின்* கவனித்துள்ளார். படத்தொகுப்பை கார்த்தி பாண்டியன் செய்துள்ளார், கலை இயக்கத்தை அர்ச்சனா கண்ணன் மேற்கொண்டுள்ளதுடன், பின்னணி இசையை விஜய் பிரபு வழங்கியுள்ளார். இப்படத்தின் மூலம் மகிழன் பரிதி, மதுமித. ஆகியோர் பின்னணி பாடகர்களாக அறிமுகமாகின்றனர். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் *காதல் சுகுமார், கிரேன் மனோகர், ரஞ்சன், அஸ்வினி* உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.******
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் *நகைச்சுவை மன்னன் *நாகேஷ்* அவர்களின் மகனும், பிரபல நடிகருமான *ஆனந்த் பாபு* கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் *ஆர்.கே. அன்புச்செல்வன்*, நம் மண்ணின் மக்கள் கட்சித் தலைவர் *ஆரிப் அலி*, தமிழ் ஃபிலிம் ப்ரொட்யூசர் கவுன்சில் லைஃப் மெம்பர் *டாக்டர் கே. கருணாகரன்* ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

