பல ஆண்டுகளுக்குப் பிறகு கதையோடு கலந்து வெளியான நகைச்சுவை படம் “கட்டா குஸ்தி”

தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள்    கதை ஒரு பாதையிலும் நகைச்சுவை வேறு பாதையிலும் பயணிக்கும். கதையோடு நகைச்சுவையும் ஒன்றாக கலந்து ஒரே பாதையில் பயணிக்கும் முழு நேர நகைச்சுவை படம்தான் நடிகர் விஷ்ணு விஷால் – நடிகை ஐஸ்வரியா லட்சுமி நடித்து வெளிவந்திருக்கும்  “கட்டா குஸ்தி.  நீளமான தலை முடியும் 8ஆம் வகுப்புவரை படித்திருக்கும் பெண்ணை திருமணம் செய்ய தேடுகிறார்  பணக்காரர் விஷ்ணு விஷால். அவருக்கு குட்டையான தலை முடியும் பட்டதாரி பெண்ணான தனது அண்ணன் மகள் ஐஸ்வரியா லட்சுமிக்கு நீளமான ஒட்டு தலைமுடி வைத்து 7 ஆம் வகுப்பவரைதான் படித்திருக்கிறாள் என்று பொய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கிறார் முனிஸ்காந்த். படத்தின் முன்பகுதி முழுவதும் சிரிப்பலை வீசுகிறது. பின்பகுதியில் ஐஸ்வரியா லட்சுமியின் உண்மை தெரிய வருகிறது. பொய் சொன்ன தனது மனைவிக்காக என்ன செய்கிறார் என்பதை இடைவிடாத சிரிப்புடன் கதை செல்கிறது.********