ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு!

சென்னை, ஜூன். 26:  ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா 23 ஜூன் 2022 அன்று சென்னை எக்மோர் சிராஜ் மற்றும் ஃபைஸ் மஹாலில் நடைப்பெற்றது. விழாவில் தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம், கானாத்தூர் புஹாரி ஹோட்டல் ஹமீத் அஹமத், காமில் மற்றும் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதைத் தொடர்ந்து 25 ஜூன் 2022 அன்று நடைப்பெற்ற வரவேற்ப நிகழ்ச்சியில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், திருச்சி எம்.ஏ.எம். கல்லூரி இயக்குனர் நிஜாம், திருநெல்வேலி புஹாரி ஹோட்டல் அதிபர் முத்து வாப்பா, அடையார் சேட் ஃபர்னிச்சர் உரிமையாளர் யூனுஸ் சேட், ஃபைரோஸ் கேட்டரிங் உரிமையாளர் முஸ்தாக் உசேன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விருந்தினர்களை புஹாரி குழுமத்தின் இயக்குனர்கள் ருமைஸுதீன் பைஜி, நவாஸ் புஹாரி, மணமகனின் தந்தை முத்து வாப்பா, மணமகளின் தந்தை ஆஷிக் புஹாரி மற்றும் பலர் வரவேற்றனர்.