இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் அறக்கட்டளைகள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளி நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்ச கணக்கில் பணம் பெற்று, ஏமாற்றி வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தானாக முன்வந்து, தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளை பதிவு செய்து விசாரணை தொடங்கியது. முதற் கட்டமாக 12.09.2025 ம் தேதி நடைபெற்ற சோதனை மற்றும் கைது நிகழ்வில் 13 வழக்குகளில் தொடர்புடைய 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழவதும் பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வழக்கு தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் பெறப்பட்டு, புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. தற்போது 23.10.2025 மற்றும் 24.10.2025 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக சோதனை மற்றும் தேடுதல் படலம் நடைபெற்றது. குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையைச் சேர்ந்த 8 காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், 20 காவல் ஆய்வாளர்கள், 15 சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய குழு சோதனையில் ஈடுபட்டு கம்பம் சந்திரன், பெருமாநல்லூர் ராணி, முசிறி யுவராஜ், வருசநாடு பழனியம்மாள், நாகப்பட்டினம் ராஜசிவம் போன்ற 5 முக்கிய குற்றவாளிகளுடன் அவர்களது கூட்டாளிகள் என 27 குற்றவாளிகளை கைது செய்துள்ளது.
இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் கைது
