திரைப்பட சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர். ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் மணிகண்டன்  சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வில் தலைவர் தமிழ்குமரனுடன், துணைத் தலைவர் ஆர்.கே. சுரேஷ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.*******

சிறப்பான இந்த தொடக்கத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.