காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது “வாவெல்ஸ்” . இப்படத்தை ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் திரையரங்களுகளில் வெளியாகிறது.******
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசியதாவது: “இந்தப் படக்குழு மிகவும் தைரியமானது. கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்க்குநர்களின் ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதைவிட யூகி சேது நடித்திருப்பதுதான் பெரிய பலம். அடுத்து அனைவரும் சேர்ந்து இந்தப் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவோம் என வாழ்த்துகிறேன்”.
நடிகர் யூகி சேது, “இந்தப் படத்தின் டிரெய்லர் கதைக்கருவையும் ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. மிமிக்ரியில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அவர்தான். காதலைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். இசையமைப்பாளர் சரவணா மிகச்சிறந்த இசையமைப்பாளர். படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், போஸ்டர் டிசைனர் என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். குறும்படங்களும் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தப் படம் இருக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

