’மேட் இன் கொரியா’ காணொளியை வெளியிட்ட நெட்ஃபிலிக்ஸ்

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. நீங்கள் கனவு காணும் விஷயங்கள் உங்கள் கதையின் தொடக்கம் மட்டுமே! தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத தென் கொரியாவின் சியோல் நகரத்திற்கு செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் காணொளியை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் சியோல் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதையில் செண்பா தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் புதிய அனுபவங்கள், சவால்கள் மற்றும் புது உறவுகள் வழியாக தன்னம்பிக்கையையும் சுய அடையாளத்தையும் கண்டுபிடிக்கும் பயணமே இப்படத்தின் மையக்கரு என்பதையே டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஒளிபரப்பாகிறது.********

*நடிகர்கள்:* பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின்

*தொழில்நுட்பக்குழு விவரம்:*  எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக், தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர், தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:* நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.