‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீடு

மாலி மான்வி மூவி மேக்கர்ஸ் – டி ஸ்டுடியோஸ் டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன்,  எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.*******