ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”அறிமுக நடிகர் நிகில் கதாநாயகனாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கதாநாயகன், ரூம் பாயாக பணிபுரிகிறார். ஒரு நாள் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான் கதை. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ் குமரன் பேசியதாவது:“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன, “குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்,”********
‘ரூம் பாய்’ படத்தின் இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது. “நிறைய பேச மாட்டேன்… திரைப்படத்தில்தான் பேசுவேன். “இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது” இந்த இசை வெளியீட்டு விழாவை தனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன், “என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான் என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்”. அவரின் ஆதரவில் இயக்குநர் படிப்புக்கு பதிலாக Sound Engineering and Recording படிப்பு படித்து 2004 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கத்தில் மாநில விருதை பெற்றேன்.

