நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் ‘முதல் முதலாய்’ இசைத் தொகுப்பு

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் இசை காணொளி தொகுப்பு  மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த தொகுப்பில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க,  ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த தொகுப்பில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.*****

இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் – மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘முதல் முதலாய்’ ஆல்பம் பாடலை முன்னணி இசை நிறுவனமான சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.