‘அன்பே டயானா’ படத்தின் முதல் பாடல் ‘பெரம்பூர் கானா’ வெளியானது

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்  மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’  திரைப்படத்தின் முதல் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.******

இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான  இசையில்,  ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள  ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.

ஜமா’  திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.