இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட பதாகை

இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் திரைப்படம் ‘கேம் பிளே’ இப்படத்தின் பதாகையை  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த பதாகை ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிவநேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “திரைக்கதைதான் கதாநாயகன்” எனும் நோக்கில்  தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை வடிவத்தை  மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட படமாக உருவாகி வருகிறது. மாறுபட்ட  கதைக் களத்துடன் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் கிஷோர் மற்றும் சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான் மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.********

“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கண்ணாடி சிதறல்களாக உடைந்த தெறிக்க, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர்  விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா கவனித்துள்ளார். படத்தொகுப்பை புவன் சீனிவாசன் மேற்கொண்டு வருகிறார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் இப்படம் தரமான படைப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.