மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு பதாகை வெளியாகியுள்ளது. ‘கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். *******
’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்தான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும். *தொழில்நுட்பக் குழு விவரம்:* இயக்குநர்: ஆர் ரவிக்குமார், தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர், பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ், மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு), சுரேஷ் சந்திரா (தமிழ்)மார்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட்ஷோ

