ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன், தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த காணொளியில் பழங்கால பின்னணியில், புதிய உலகை இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ரோஜின் தாமஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சனூப் சந்தோஷ், சாண்டி, தேவிகா, நிதீஷ் பரத்வாஜ், வினீத், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் குல்ப்ரீத் யாதவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.*******
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு 15 மொழிகளில் இந்தப் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக்குழு விவரம்: ஒளிப்பதிவு: நீல் டி’குன்ஹா, இசை: ராகுல் சுப்ரமணியன், எடிட்டிங் மற்றும் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: இயக்குநர் ரோஜின் தாமஸ், கலை இயக்கம்: ராஜீவன், ஆக்ஷன்: ஜங்ஜின் பார்க் மற்றும் கலை கிங்சன், இணைத் தயாரிப்பாளர்கள்: வி.சி. பிரவீன் மற்றும் பைஜு கோபாலன், நிர்வாகத் தயாரிப்பாளர்: கிருஷ்ணமூர்த்தி

