பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம். அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடிய நிகழ்வில் கென் கருணாஸ் பேசியதாவது, “ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார். தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சூரஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி.” என்று பேசினார்.******
ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது..,
“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம். ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு. இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.
இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள். பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’ எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி. இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி. என்றார்

