ஏபி இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” படத்தை விக்கி பாஸ்கர் இயக்குகிறார். ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பதாகை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது.*****
குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தொழில்நுட்பக் குழு விபரம்: தயாரிப்பு – AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இயக்கம் – விக்கி பாஸ்கர் ஒளிப்பதிவு – லூக் ஜோஸ் எடிட்டிங் – நாஷ் இசை – பரத் சங்கர் பப்ளிசிட்டி டிசைன் – வியாகி உடை வடிவமைப்பு – நவா ராஜ்குமார் கலை இயக்கம் – வீரமணி கணேசன் சிஜி – Srivfx மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

