*இயல், இசை, கூத்(து)* எனும்மூன்று தமிழும் இங்கே
ஏறாத மலைதனிலே ஏறு கின்ற
முயற்சியில்தான் இருக்கின்ற தென்றால் மெய்தான்!
முத்தமிழில் இன்றளவில் *இசைத்த மிழ்க்கே*
முயற்சிபல இருந்தாலும் முயல்வோ ரைத்தான்
முன்னேற்றி ஆதரிக்க ஆர்வம் கொண்டே
அயராமல் ஆணி வேராய் நண்பர் *எஸ்.பி.*
*சரவணனார்* அதைச்செய்து வருகின்றாரே!
அமர்க்களத்தோ(டு) ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி
அழகு-ஒழுங்கு நேர்த்தியொடும் நேரத் தோடும்
சமர்த்தாகக் கலைஞர்களை ஒருங்கிணைத்துச்
சகலவித மரியாதை சிறப்புச் செய்து
*விமர்சகன்* என் கின்றதோர் மின்சார்ந் திட்ட
மேன்மைமிகு ஊடகத்தார் நோக்கம் வெல்க!
*”நமக்கான ஊடகமே விமர்ச கன்”* இந்
நம்பிக்கை ஊட்டிவளரும் நண்பர் வாழ்க!
பொதுவாகப் *பாடகர்கள்,* இசையமைக்கும்
*புதியவர்கள்,* *இசைக்கருவி வாசிப்போர்,* நாட்டில்
அதிவேக மாய்வளரும் நாட்டி யத்தின்
அருமைமிகு இளம்பெண்கள் தம்மை என்றும்
பொதுமேடை களில்நிறுத்திப் பெருமை செய்து
புத்துணர்ச்சி அவர்க்கூட்டி வளர்க்கும் எண்ணம்
இதுவரைக்கும் யார்க்குண்டாம் கேட்டால் ; உள்ளார்
*எம்சரவ ணனார் எஸ்.பி* ; கலைஞர் சொல்வார் !
தம்முடைய விமர்சகன்ஊ டகத்தைக் கொண்டே
தளராமல் *எஸ்.பி.எஸ்.* முழுமூச் சாகச்
செம்மையுடன் கலைஞர்களை ஒருங்கிணைத்துச்
சிறப்பித்து வருகின்றார் ; அதனால் இங்கே
அம்மம்மா… எனப்பல்லோர் வியந்து போற்றும்
அளவுக்குக் கலைஞர்களும் மகிழக் கண்டே
சும்மாஎன் எழுதுகோல் இருந்தி டாமல்
தூயமனத் துடன்வாழ்த்தை அவர்க்குச் சொல்லும்!
*பாதாசன்*

