ஸ்மாஷ் பேட்மிண்டன் வீரரின் கதை

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் ஒயிட் நைட் எண்டர்டெய்மெண்ட் நிறுவன உரிமையாளர்கள் விஜய் சுப்ரமணியன் மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோரும், ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்மீனா பிலிம் கம்பெனி தயாரிப்பாளர் எகத்தெரினா கோலுபேவா இணைந்து புதிய இந்தோ-ரஷ்ய திரைப்படமான ‘ஸ்மாஷ்’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பேட்மிண்டன் வீரரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது******

இதனிடையே, இப்படத்தின் காணொளி வெளியீட்டு விழா புதுடெல்லியில் உள்ள ரஷ்யன் ஹவுஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ரஷ்ய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்வெட்லானா சுப்ஷேவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியா – ரஷ்யா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் ‘SMASH’, இரு நாடுகளுக்கும் இடையிலான கலை மற்றும் கலாச்சார உறவுகளை சினிமா மூலம் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…