5 நகராட்சிகள் (ம) 5 பேரூராட்சிகள் இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகளும் 12 லட்சம் மக்கள் தொகையும் உள்ளது. தற்போதுள்ள தாம்பரம் மாநகராட்சியில் 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 76 துணை சுகாதார மையங்கள் மற்றும் 18 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை (ம) UNICEF நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னனு குடும்பபதிவேடு (e-Family Register) உருவாக்கப்பட்டு, சேவை பகுதிகளை வரையறை செய்து, பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய பொது சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கணக்கெடுப்பு பணி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் முன்னோடி திட்டமாக செயப்படுத்தப்படுகிறது. இக்கணக்கெடுப்பின் மூலம் வீட்டு விவரம், ஆதார் எண், கைபேசி எண், குடும்ப அட்டை விவரம், மருத்துவ காப்பீட்டு விவரம், சொத்து வரி விவரம், குடும்ப விவரம், கல்வி, தொழில், குழந்தைகளின் தடுப்பூசி விவரம், மகப்பேறு (ம) குடும்ப நல விவரம், நோய் பாதிப்பு விவரம், கால்நடைகள் (ம) செல்லப்பிராணிகளின் விவரம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. முதற்கட்ட கணக்கெடுப்பு பணி மார்ச்2025 முதல் ஜீலை 2025 வரை மேற்கொள்ளப்பட்டு, 64,337 குடும்பங்களின் விவரங்களை சேகரித்து, 21 % பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்ட கணக்கெடுப்பு பணிவரும் 16.10.2026 முதல் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொடங்கப்பட்டு, நவம்பர் மாத இறுதிவரை நடைபெறவுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் / சந்தேகங்களுக்கு மாநகராட்சி உதவி எண். 📞18004254355 / 18004251600 தொடர்பு கொள்ளவும். எனவே, பொதுமக்களாகிய தாங்கள் உரிய தகவல்களை வழங்கி, இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

