முதல்வர்களின் முதல்வருக்கு பிறந்தநாள்! தமிழகத்தின் தலைசிறந்த ஆட்சிக்கு பிறந்தநாள் – பிரசிடெண்ட் அபூபக்கர்

ஓய்வறியாது ஓடிக்கொண்டேயிருக்கும் உழைப்பிற்கு பிறந்தநாள்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கோட்டையில் ஒலித்த குரலுக்கு பிறந்தநாள்!

சிறுபான்மை மக்களின் பாதுகாவலருக்கு பிறந்தநாள்!
தந்தை வழியில் பயணிக்கும் தனயனுக்கு பிறந்தநாள்!

வெற்றிடத்தை நிரப்ப வந்த வேந்தருக்கு பிறந்தநாள்!
கலங்கி நின்ற தமிழினத்தின் கலங்கரை விளக்கிற்கு பிறந்தநாள்!

திருவாரூரின் இளைய சூரியனுக்கு பிறந்தநாள்! அறிவாலயத்தின் இரண்டாம் சூரியனுக்கு பிறந்தநாள்! நாவெல்லாம், நாடெல்லாம் போற்றும் முதல்வருக்கு பிறந்தநாள்!

நாளெல்லாம் நலன் காக்கும் திட்டம் தரும் திராவிடத்திற்கு பிறந்தநாள்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் முதல்வருக்கு பிறந்தநாள்!

கோபாலபுரத்தில் இருந்து செங்கோட்டை நோக்கி பயணிக்கும் தமிழருக்கு பிறந்தநாள்!
கேட்காமலே கிடைக்கும் தட்டாமலே திறக்கும் அட்சயப் பாத்திரத்திற்கு பிறந்தநாள்!

உங்களில் ஒருவன் நான் எனச் சொல்லும் உடன்பிறப்புக்கு பிறந்தநாள்!
விடியல் ஆட்சி தரும் வியப்பின் ஆச்சரியக்குறி பிறந்தநாள்!

ஒன்றா இரண்டா ஓராயிரம் திட்டங்கள் தரும் ஓய்வறியா சூரியனுக்கு பிறந்தநாள்!
ஒருமித்தக் குரலோடு ஒன்றுபட்டு சொல்கிறோம் வென்று காட்டுங்கள்…

உங்கள் சேவை;
நாட்டுக்கு இன்றைய தேவை!!!

இப்படிக்கு,
பிரசிடெண்ட் அபூபக்கர் தலைவர்,இந்திய ஹஜ் அசோசியேஷன்,
புதுடெல்லி.