ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டேன் – சந்தானம்

நடிகர் சந்தானம் நடிப்பில், மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்ஏஜென்ட் கண்ணாயிரம்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் சந்தானம் பேசும்போது, “இப்படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மாமகன்  கதை இருக்கும். இப்படத்தில் என்னை கொஞ்சம் கூட காமெடி செய்ய இயக்குநர் விடவில்லை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்ற. கொண்டேன், படத்தில் சில ஆக்சன் காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார், அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.**********

ரியா சுமன், புகழ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒரு புதுவிதமானகதாபத்திரமாக தோன்றுவார்கள். யுவன் சங்கர் ராஜா உடைய இசை இந்த படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உடைய உழைப்புக்கு நன்றி கூறி ஆக வேண்டும், அவர்கள் தான்படத்தை மேம்படுத்தியுள்ளனர். படத்தை பார்த்து உங்கள் கருத்தை கூறுங்கள்.”

நடிகை ஆதீரா கூறியதாவது..,இது தான் சந்தானம் சாருடன் நான் நடிக்கும் முதல் படம். இதுவரை நீங்கள் சந்தானம் சாரை பார்த்தகதாபத்திரத்தில் இருந்து வேறுபட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும்பிடித்தது.  இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. இந்த படம் கண்டிப்பாகவெற்றியடையும். “

நடிகர் மதன்  கூறியதாவது..,இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், சந்தானம் சாருக்கு  நன்றி. நல்ல படத்தைநமது மொழிக்கு ஏற்றார் போல் ரீமேக் செய்வது ஆரோக்கியமான விஷயம். நமது மொழிக்கு ஏற்றார் போல்உருவாக்க, படக்குழு கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமானகதாபத்திரத்தை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் உங்களுக்கு பிடிக்கும் என்றுநம்புகிறேன்.”

நடிகர் புகழ் பேசியாதாவது.., சந்தானம் எனக்கு அண்ணன் போல, அவர் என்னுடைய வளர்ச்சியில் பெரிய பங்காற்றியுள்ளார்.  இந்த வாய்ப்பைஎனக்கு கொடுத்ததற்கு அவருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.  நானும், சந்தானம் அவர்களும் இந்த படத்தில் ஒருவித்தியாசமான காம்போவாக வருவோம், அது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஹீரோயினுக்கும்எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

நடிகை ரியா சுமன் பேசியாதாவது.., இது என்னுடைய மூன்றாவது தமிழ்படம். இந்த படத்தில் டாக்குமென்டரி இயக்குனராக நடித்துள்ளேன்.  வழக்கமான ஹீரோயின் போன்று இல்லாமல் , இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்துகாட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது, அது தான் இந்த படத்தை நான் ஒத்துகொள்ள காரணம். சினிமாத்துறையில்பல வருட காலம் பயணித்தாலும், இன்னும் புதிதாய் வந்த நடிகர் போல் சந்தானம் உழைப்பை கொடுக்கிறார். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.  சந்தானம் புகழ் காம்போ சூப்பராக இருக்கும்.  இந்தபடத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.

இயக்குனர் மனோஜ் பீதா பேசியாதாவது..,இந்த படத்தில் சந்தானம் தன்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காமெடி செய்யவில்லை. ஒரு சீரியஸான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் அவரும் புகழும் வரும்காட்சிகளில் அவர் வழக்கமான காமெடிகள் செய்யாமல் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, படத்தின்கதாபத்திரமாக மாறியுள்ளார்.  இது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.  நடிகர்கள்மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் கதையோட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு தங்களது முழுபங்களிப்பையும் கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது படத்தை  உங்களது கருத்தை கூறுங்கள். நன்றி.

எடிட்டர் அஜய் பேசியாதாவது.., இந்த படம் ரீமேக் படம் மாதிரி இருக்காது. இந்த படத்தில் கடின உழைப்பை கொடுத்து ஒரு வித்தியாசமானபடத்தை கொடுக்க முயற்சித்துள்ளோம்.  இந்த படத்தில் ஒரு புது சந்தானத்தை நீங்கள் பார்க்கலாம். வழக்கமாக சிரிக்க வைக்கும் சந்தானம், இந்த படத்தில் பல காட்சிகளில் அழ வைப்பார். இந்த படம் ஒருவித்தியாசமான அனுபவமாக இருக்கும். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.