சென்னை குரோம்பேட்டையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

சென்னை குரோம்பேட்டையில் அர் ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டர்  சார்பில் இலவச ஆயுர்வேதிக் மருத்துவ முகாம் நடை பெற்றது.

மருத்துவ முகாமை பல்லவபுரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொடங்கி வைத்தார். தக்வா செண்டரின் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட சேகநாதபுரம் அல் மஹதூர் ரஹ்மானியா மதர்ஸாவின் செயலாாரும் குரோம்பேட்டை கணபதிபுரம் மஸ்ஜித் இ தக்வா பள்ளியின் துணைத் தலைவருமான பேராசிரியர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.

இஸ்லாமிக் தக்வா செண்டரின் முகம்மது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். திமுக நகர துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மதிமுக  செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.நாசர், குரோம்பேட்டை காயிதேமில்லத் நினைவு ஜும் ஆ பள்ளியின் தலைவர் முஹம்மது காசீம், 42வது வட்ட திமுக செயலாளர் பெர்னாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.