ஆப்கானிஸ்தானை எத்தனை நாட்களில் தாலிபன்கள் தங்கள் வசமாக்கினர்?

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றத் தொடங்கிய வேளையில், அவர்கள் காபூலை பிடிக்க ஒரு மாதமே இரண்டு மாதங்களோ ஆகலாம் என பல சர்வதேச ஆய்வாளர்களும் உளவுத்துறை நிபுணர்களும் கூறி வந்தனர். ஆனால், அவர்களின் எண்ணங்களை பொய்யாக்கும் வகையில் தலைநகரின் எல்லையில் இருந்து …

ஆப்கானிஸ்தானை எத்தனை நாட்களில் தாலிபன்கள் தங்கள் வசமாக்கினர்? Read More

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர்

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் என்ற வெப்ப மண்டல ஒட்டுண்ணி நோய்க்கு 90 சதவீதம் சிறப்பான சிகிச்சையளிக்கும்,  எளிதான, விலை குறைவான, வைட்டமின் பி12, பூசப்பட்ட மிகச் சிறிய ரக வாய்வழி உயிரி மருந்தை  இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின், தன்னாட்சி அமைப்பான நானோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் (INST) டாக்டர் …

உள்ளுறுப்பு லீஸ்மேனியாசிஸ் சிகிச்சை திறனை அதிகரிக்க எளிதான, வாய்வழி உயிரி மருந்தை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பிடித்தனர் Read More

இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம்

இந்திய நாடே கோலாகலமாக கொண்டாடும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கும் மக்கள் நம் தேசியக் கோடியை ஏற்றுவதும், சிறிய வடிவ கொடியை சட்டையில் குத்திக்கொண்டும் வலம் வருவார்கள். வீதியெங்கும் இந்திய கொடி விற்கப்படும் இந்நேரத்தில், மூவர்ண இந்திய கொடியை தயாரிக்கும் …

இந்திய தேசியக் கொடியை தயாரிக்கும் ஒரே இடம் Read More

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி தமிழ்நாடு அரசின் நிதி நிர்வாகம் மற்றும் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காய்தல், உவத்தலின்றி விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக ஒன்றிய …

வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யும் வெள்ளை அறிக்கையை வரவேற்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தேசிய கைத்தறி தினம் கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுதில்லியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், மத்திய …

7வது தேசிய கைத்தறி தினம்: காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார் Read More

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘வெள்ளையனே வெளியேறு இயக்க ஆண்டுவிழா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை …

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து Read More

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளைஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள்

உள்ளூர் கலைப்பொருட்களை வளர்க்கவும் அவற்றைபிரபலப்படுத்தவும் ஓர் சிறந்த நினைவூட்டியாக கைத்தறி தினம்கொண்டாடப்படுகிறது. பல்வேறு சந்ததியினரிடையேவரவேற்பைப் பெறுவதற்காக தரத்தை மேலும் வலுப்படுத்துவதில்கைத்தறித் துறையும் அது சம்பந்தமான ஊரக கலைப் பொருட்கள்துறையும் கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களுக்குநுகர்வோர் கூடுதல் ஆர்வம் காட்டுவதால், தர மேம்பாடு, காலத்தின்கட்டாயமாகியுள்ளது.” ‘தேசிய கைத்தறி தினம்’ என்ற தலைப்பில்மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள்தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்தஇணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில்காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவுபேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஆர் சீரங்கராஜன் கூறினார். நெசவுக்கு முந்தைய செயல்முறைகள் மற்றும் தறிஉபகரணங்களின் பராமரிப்பிலும் கவனம் செலுத்துமாறு அவர்வலியுறுத்தினார். இந்தத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுஅதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். உதாரணத்திற்குஉணரி போன்ற தொழில்நுட்பங்களால், ஏதேனும் இடர்பாடுகள்எழும்போது, தானியங்கியாக நெசவாளர்களுக்கு தகவல்அளிக்கப்படுவதன் மூலம் அது போன்ற பிரச்சினைகளை சுலபமாகஎதிர்கொள்ளலாம். சாயத்தின் செயல்முறைகளில் நிலையானவழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  தேசிய கைத்தறி மேம்பாட்டுக்கழகத்தின் மூத்த அதிகாரி திரு விஜய் பிரதாப் கௌதம்பேசுகையில், இதே தினத்தன்று தொடங்கப்பட்ட சுதேசிஇயக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுவதாகக்கூறினார். கைத்தறி பொருட்கள் பற்றி மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உள்ளூர் பொருட்களின் பயன்பாடுமற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பது தான் சுதேசி இயக்கத்தின்முக்கிய நோக்கம். அடிமட்ட அளவில் கைத்தறி துறையில்சேவைகளை அளிப்பதற்காக கைத்தறி அலுவலகங்களும் அதன்கிளைகளும் சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறுஇடங்களில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நெசவுத் தொழிலில் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதிருவண்ணாமலை தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நெசவாளிதிரு பி. தனசேகரன், தமது குடும்பம் மூன்று தலைமுறைகளாகஇந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். பெருந்தொற்றுகாலகட்டத்தில் பிற துறைகளைப் போல நெசவுத் தொழிலிலும்கொவிட் தொற்றின் தாக்கம் பெரிதும் காணப்பட்டதாக அவர்தெரிவித்தார். மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலை இழப்புஉள்ளிட்ட பிரச்சினைகளை நெசவாளிகள் சந்தித்தனர். ஆரணியில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆரணியில் சுமார்ஒரு லட்சம் நெசவாளிகள் வசிப்பதால் இந்த முன்முயற்சி சந்தைஉள்ளிட்ட துறைகளில் பேருதவியாக இருக்கும். கோரா, ஜரிபோன்ற பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமானவிலைகளில் நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டும் என்றும் அவர்கேட்டுக்கொண்டார். இந்த வலைதள கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்தியசென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருஜே. காமராஜ், மகாத்மா காந்தி, கைத்தறியை ஏழ்மையை ஒழிக்கும்முக்கிய கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், ஆங்கிலேயர்களுக்குஎதிரான மாபெரும் ஆயுதமாகவும் பயன்படுத்தி, அதில் வெற்றியும்கண்டார் என்று தெரிவித்தார். கைத்தறி உள்ளிட்ட உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்கொள்கையின் அடிப்படையில் தற்சார்பு இந்தியா திட்டம்உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நல்வாழ்விற்காக பிரதமர்திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தேசிய கைத்தறிதினத்தன்று காதி மற்றும் இதர ஊரகத் தொழில்துறைகளின்பொருட்களை வாங்கி இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின்வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்போம் என்று அனைவரும் உறுதிஏற்போம் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, புதுச்சேரி கள மக்கள் தொடர்பு அலுவலகத்தின்துணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி திருமிகுவித்யா ஏ.ஆர் நன்றி தெரிவித்தார்.

கைத்தறி தின கொண்டாட்டம்- உள்ளூர் தயாரிப்புகளைஊக்குவிப்பதற்கான நினைவூட்டல்: நிபுணர்கள் Read More

23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 வருடம் சிறையில் இருந்துள்ளார். 23 வருடத்தில் பெயில், பரோல் அவருக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. சிறையில் இருந்த காலத்தில் தாய் தந்தை இறந்துள்ளனர். இந்த நிலையில் எந்த ஆதராமும் இல்லை என  குற்றமற்றவர் …

23 வருட சிறை வாசத்திற்கு பின் ராஜஸ்தான் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள முஹம்மது அலி தனது தந்தையின் கல்லரையில் கதறி அழும் காட்சி வைரலாகும் காணொளி Read More

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது

கடந்த 40 ஆண்டு காலமாக, வடஇந்திய பெருங்கடல்பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்துவருவதாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகூறுகிறது. சமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடியஇந்த அதிகரிப்புக்கு, அதிக ஈரப்பதம், குறிப்பாகவளிமண்டலத்தில்,  பலவீனமான செங்குத்து காற்று, மற்றும்சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம். இது,  சூறாவளியைஅதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவிவெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறது. புவிவெப்பமயமாவதன் காரணமாக, உலக கடற்பரப்புகளில், சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரிப்பதுகவலையளிக்கும் விஷயமாக உள்ளது. வடஇந்தியபெருங்கடல்பகுதியில், அதி தீவிர புயல்கள் அடிக்கடிஉருவாவது, கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்துமற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்ற திட்டத்தின் கீழ், வட இந்தியப்பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டில்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் ஓட்டம் மற்றும் எல் நினோ–தெற்கு அலைவு (ENSO) ஆகியவற்றில் முக்கியமானவளிமண்டல அளவுருக்களின் பங்கு மற்றும் செல்வாக்குகுறித்து  காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை மற்றும்கடற்படை கட்டிடக்கலை விஞ்ஞானிகள் ஜியா ஆல்பர்ட், அதிரா கிருஷ்ணன் மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர்வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மைமையத்தின் கே.எஸ்.சிங் மற்றும் மத்திய அரசின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டனர்.  ஆற்றல் சிதைத்தல் குறியீடு (Power Dissipation Index ) என்றழைக்கப்படும் வெப்பமண்டலசூறாவளிகளின் அழிவு ஆற்றலுக்கான அளவுகோலுடன்,  கணிசமான தொடர்பை நிரூபித்த இந்த ஆராய்ச்சிசமீபத்தில் ‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பில் ஸ்பிரிங்கர்  என்ற இதழில் வெளியிடப்பட்டது.  குறிப்பாக, இந்த வெப்ப மண்டல சூறாவளிகள், பருவமழைக்குமுந்தைய காலத்தில் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது. 2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்குகாணப்பட்டது. வலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையானகுறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்துகாற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும்அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்தவெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் எனஇந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள், வட இந்தியபெருங்கடல் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின்செயல்பாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சியை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய பெருங்கடலில் சூறாவளி புயல் அதிகரிக்கிறது Read More

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் 16.7.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக பேசும் போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் …

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். Read More