தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பவிளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும்நோக்கத்திலும், ஒன்றிய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றியஅரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து“புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான“விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினைசேர்த்துள்ளது.  தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றியஅரசால்   அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குபெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக்கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள்மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலைஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்றுஇருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும்,கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாதுஇடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்துசிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியவிளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது Read More

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹைபோடோன்ட்வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான் மாநிலம்ஜெய்பூரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மேற்கு மண்டலத்தில் இந்திய புவியியல் ஆய்வுநிறுவனத்தைச் சேர்ந்த  கிருஷ்ணகுமார், பிரக்யாபாண்டே, த்ரிபர்னா கோஷ், டெபாசிட் பட்டாச்சாரியாஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதனைக்கண்டறிந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மர் பகுதியிலிருந்துஜுராசிக் பாறாங்கற்களில் (ஏறத்தாழ 160-168 மில்லியன்ஆண்டுகள் பழமை வாய்ந்த) முதன்முறையாகஹைபோடோன்ட் வகை சுறா மீன்கண்டறியப்பட்டிருப்பதாக மூத்த புவியியல் ஆய்வுஅதிகாரி திரு கிருஷ்ண குமார் கூறினார். தற்போதுஅழிந்திருக்கும் இந்த வகை சுறா மீன்கள், ஜுராசிக்மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் கடல் மற்றும்நதிகளில் பெரும்பாலும் காணப்பட்ட மீன் வகை ஆகும். எனினும் ஜுராசிக் காலத்தின் மத்தியில் இந்த வகை சுறாமீன்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இவை முழுவதும்அழிந்தன.  ஜெய்சல்மரில்  புதிதாக கண்டறியப்பட்டுள்ள பற்கள், ஸ்ட்ரோஃபோடஸ் ஜெய்சல்மரென்சிஸ் என்ற புதியஉயிரினத்திற்கு சொந்தமானது என்று ஆராய்ச்சிகுழுவினர் தெரிவிக்கின்றனர்.‌ இந்த உயிரினம் இந்தியத்துணை கண்டத்தில் முதன்முறையாககண்டறியப்பட்டிருப்பதுடன், ஆசியாவில் ஜப்பான், தாய்லாந்தைத் தொடர்ந்து இது மூன்றாவதுகண்டுபிடிப்பாகும். ஜுராசிக் காலத்தியமுதுகெலும்புடைய புதைபடிவங்கள் குறித்தஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமைல்கல்லாக அமைந்துள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள்ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு Read More

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் நாக்பூரில் இயங்கும் தேசியசுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), கொவிட்-19 மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில்வாய் கொப்பளித்து ஆர்டி–பிசிஆர் பரிசோதனை செய்யும்முறையின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. எளிதான, வேகமான, குறைந்த கட்டணத்திலான இந்தத்தொழில்நுட்பம், நோயாளிகளுக்கு உகந்த வகையிலும், சௌகரியமாகவும் இருப்பதுடன்,  முடிவுகள் உடனடியாகவும்கிடைக்கப்பெறுகிறது. குறைந்த அளவிலானஉள்கட்டமைப்பு வசதிகளே தேவைப்படுவதால் ஊரக மற்றும்பழங்குடி பகுதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகபயனளிக்கும்.சிஎஸ்ஐஆர்– தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிநிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பு, நாட்டிற்கு சேவை புரிவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம்தெரிவித்துள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்திடம் இந்தத் தொழில்நுட்பம்வழங்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தக் கண்டுபிடிப்புவணிக ரீதியானதாக மாறுவதுடன், தனியார், அரசு மற்றும்பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளைஉள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும். இந்த நிகழ்வின் போது பேசிய மத்திய சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, “உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி–பிசிஆர்பரிசோதனை செய்யும் முறையை,  நாடு முழுவதும், குறிப்பாக, வளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடிபகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவானமற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள்செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமதுபோராட்டமும் வலுப்பெறும். உப்புத் தண்ணீரில் வாய்கொப்பளித்து ஆர்டி–பிசிஆர் பரிசோதனை செய்யும்முறையை வணிக ரீதியாக மாற்றுவது தொடர்பாக குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவு, சிஎஸ்ஐஆர்–தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைஅணுகியது”, என்று கூறினார்.

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி Read More

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ்பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குமத்தியக் குழு விரைந்துள்ளது. கோழிக்கோட்டில் கடந்த 3ம் தேதி, 12 வயது சிறுவன்ஒருவன்  மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு அறிகுறியுடன்மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு நிபாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  இந்த வைரஸ், பழந்தின்னிவவ்வால்களின் எச்சில் மூலம் பரவுகிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன்இன்று காலை உயிரிழந்தான். இதையடுத்து கேரளாவுக்கு நோய்கட்டுப்பாட்டு  தேசியகுழுவை (என்சிடிசி) மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தகுழு கேரளாவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியைவழங்கும். இங்கு நோய் கட்டுப்பாடு, பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள  மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும், கேரள மாநிலம்கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு Read More

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து …

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி Read More

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார்

பெண்கள் தங்கள் கல்விக்கு அதிலும் உயர்கல்விக்குமுக்கியத்துவம் தர வேண்டும்.  பெண்கள் படிக்கவே கூடாதுஎன்ற காலம் போய் பள்ளி இறுதித் தேர்வுகளில்மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறும்காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. பாரதி கண்டபுதுமைப் பெண்களாக மாணவிகள் மாறவேண்டும். அதற்குகடுமையாக உழைப்பதோடு  உரிமைக்கு அஞ்சாமல் குரல்எழுப்பும் துணிவும் வேண்டும். பொதுவாக ஆண்களைவிடபெண்களுக்குத்தான் மனோதிடம் அதிகம். பெண்களின்உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.  ஒப்பீட்டு அளவில்புதுச்சேரியில் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும்திருப்திகரமாக உள்ளன.  பெண்களின் உரிமைகள் குறித்துஆன்களுக்கு கற்பிக்க வேண்டும்.  மாணவிகள் தங்கள் வீடுகளில்உள்ள தந்தை, சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.  இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில்நாம் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதோடுசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள்குறித்து தெரிந்துகொண்டு அவர்களின் தியாகத்தையும் போற்றவேண்டும் என்று புதுச்சேரி அரசின் செய்தி–விளம்பரத்துறையின் அரசு செயலரும் ஆசாதி கா அம்ருத்மகோத்சவ் மாநிலக் குழு உறுப்பினர்–செயலருமானதிரு.செ,உதயகுமார் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்துநடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழாவின்ஒரு பகுதியாக நடத்தப்பட்ட  ஆன்லைன் பேச்சுப் போட்டியில்வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கியபோது செயலர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சி செயலரின் அறையிலேயே நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது அறிமுக உரையில்28.8.2021 அன்று நடத்தப்பட்ட வெபினாரில் சாகித்தியஅகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும்புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் மின்னணுமற்றும் கணிப்பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர்க.நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருக்க விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றுபரிசுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.முதல் பரிசை ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசைசி.தாமரைச்செல்வி மற்றும் இரண்டு மூன்றாம் பரிசுகளை எஸ்.ஸ்ரீமதி மற்றும் எஸ்.சந்தியா ஆகியோர் செயலாளர்திரு.செ.உதயகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப்பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன்மற்றும் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்துகற்றுத் தரவேண்டும் – அரசு செயலாளர் செ.உதயகுமார் Read More

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள்

சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழகவீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களைஅனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியைபொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் எனமத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகைதொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வுமேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சிநிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சிதுணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷாஉள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர்,  சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள்இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள்இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம்அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம்ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களதுசெய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாகபல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள்தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள்மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தசெய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின்பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள்மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம்மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள்விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்என்றும் ஓரளவுக்காவது சுயமாக  வருவாயை ஈட்டும்வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களதுதரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறுசெயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம்விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும்ஒளிபரப்பப்பட்டது.  அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்தியவானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள் Read More

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு

சிக்கலான நேரங்களில் நம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை நிறைந்த புதிய அனுபவங்களுக்கான வழிகளை இலக்கியம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார். “இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இலக்கிய நூல்கள் மீண்டும் உருவாக்கி,  நாம் நம்மை இழக்கும் உலகுக்குள் மாயமாக …

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு Read More

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியமில்லை என்று டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய டாக்டர் திரேன் குப்தா, “எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு …

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல் Read More

பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து வெளியிட்ட முதியவர் சென்னையில் கைது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் கொள்கைகளை விமர்சித்து மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வந்த சென்னை மாதவரம் பகுதியியை சேர்ந்த மன்மோகன் …

பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து வெளியிட்ட முதியவர் சென்னையில் கைது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More