போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது …

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் Read More

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்வியமூர்த்தியின்  பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆர்.எம்.வீயை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி,ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார். ஆர்.,எம்.வீ இலங்கையில் தமிழ்வழி …

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை Read More

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள்

சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழகவீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களைஅனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியைபொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் எனமத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் உள்ள பொதிகைதொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வுமேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சிநிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சிதுணை தலைமை இயக்குனர் திரு. கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு. சையது ரபீக் பாஷாஉள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர்,  சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடிவருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள்இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள்இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம்அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம்ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களதுசெய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாகபல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியதகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள்தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள்மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தசெய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின்பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள்மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம்மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள்விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும்என்றும் ஓரளவுக்காவது சுயமாக  வருவாயை ஈட்டும்வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களதுதரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறுசெயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம்விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும்ஒளிபரப்பப்பட்டது.  அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல்தலைமை இயக்குனர் திரு. மா. அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்தியவானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

அதிகம் அறியப்படாத தமிழக சுதந்திரபோராட்ட வீரர்களை தொலைக்காட்சிவாயிலாக வெளிக்கொண்டு வர மத்தியஇணையமைச்சர் வேண்டுகோள் Read More

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரையென ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு, “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். காலநிலை பேரழிவால் …

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரையென ஆய்வில் தகவல் Read More

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு!

திருச்சி, ஆகஸ்ட் 31: தமிழநாடு வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் தொழிலதிபர் எம். சிராஜுதீன் இல்லத் திருமண வரவேற்பு விழா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் 29ம் …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண வரவேற்பு! Read More

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார்.  மாநில நிர்வாகிகள் ஆ.கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் அரசு,  விஜய் சேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், பெரம்பூர் நிசார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் Read More

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால் நீங்களெல்லாம், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களிடத்தில்,அவர் குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச …

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின் Read More

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, மடிப்பாக்கம், ராமகிருஷ்ணராஜ் நகரைச்சேர்ந்த கீதா, பெ/வ.58, க/பெ.கபிலன் என்பவர் கடந்த19.8.2021 அன்று மாலை, வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியைபறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீதா S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. ​​S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவுஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ் (எ) ராபர்ட், வ/23, த/பெ.வின்சென்ட், எண்.25, ஏரிக்கரை தெரு, ஜமீன்பல்லாவரம், சென்னை, 2.சிவா (எ) சிவசங்கரன், வ/26, த/பெ.ஶ்ரீராம், எண்.64, பத்மாவதிநகர் 2வது குறுக்கு தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 3.லியோ (எ) லியோனார்டு ஜேம்ஸ், வ/28, த/பெ.டேனியல்ஜேம்ஸ், எண்.19/40, சிதம்பரம் தெரு, பாரதிபுரம், ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை, ஆகிய 3 நபர்களை கைதுசெய்தனர்.​ ​​விசாரணையில் குற்றவாளிகள் மூவரும் S-7 மடிப்பாக்கம், S-10 பள்ளிக்கரணை, S-15 சேலையூர், S-6 சங்கர் நகர் மற்றும் S-5 பல்லாவரம் ஆகிய  காவல் நிலையஎல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாகநடந்து செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளைபறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும்குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில், குற்றவாளி ராஜேஷ் (எ) ராபர்ட்மீது மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையஎல்லைகளில் சுமார் 10 செல்போன் பறிப்பு வழக்குகள்உள்ளது தெரியவந்தது. ​​விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று(29.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது. Read More

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய …

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு

சிக்கலான நேரங்களில் நம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை நிறைந்த புதிய அனுபவங்களுக்கான வழிகளை இலக்கியம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார். “இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இலக்கிய நூல்கள் மீண்டும் உருவாக்கி,  நாம் நம்மை இழக்கும் உலகுக்குள் மாயமாக …

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு Read More