தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலைக்குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின்உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குநடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்றுகாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்துகட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்டசெயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) • மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து • திரையரங்குகள் • அனைத்து மதுக்கூடங்கள் • நீச்சல் குளங்கள் • பொது மக்கள் கலந்து கொள்ளும்சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரநிகழ்வுகள் • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  • உயிரியல் பூங்காக்கள் • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகதிருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர்.  • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். …

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு Read More

புலி வால் பிடிக்கும் ஒன்றிய அரசு? பிளவு சிந்தனைக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தும், 35 ஏ பிரிவில் வழங்கப்படிருந்த உரிமைகளையும் 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் பறித்ததை நாடு மறந்துவிடவில்லை. ஒன்றுபட்ட ஜம்மு …

புலி வால் பிடிக்கும் ஒன்றிய அரசு? பிளவு சிந்தனைக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் Read More

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு

மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலஅரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துமத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் இன்றுஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம், கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்குவங்கத்தில்  கொவிட்-19 மேலாண்மை மற்றும் தடுப்பூசி நிலவரத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மலைப் பிரதேசங்கள் மற்றும் இதரசுற்றுலாப் பகுதிகளில் கொவிட் சரியான நடத்தைவிதிமுறை பின்பற்றப்படவில்லை என்று ஊடக செய்திகள்தெரிவித்திருப்பது தொடர்பாக மத்திய உள்துறைச்செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். தொற்றின் இரண்டாவது அலை இன்னும் நீங்கவில்லை; முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப்பின்பற்றுவது மற்றும் இதர பாதுகாப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதை மாநிலங்கள்கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது அலையின் சரிவு வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாறுபட்டுள்ளது, ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் குறைந்து வரும்நிலையிலும், தமிழகம், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்று உறுதிவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதுகவனிக்கப்படவேண்டிய விஷயம் என்று கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம்அறிவித்தவாறு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொவிட் சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுதல் ஆகிய 5 உத்திகளைக் கடை பிடிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. எதிர்வரும்காலத்தில் தொற்று பரவல் அதிகரித்தால் அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் போதிய மருத்துவஉள்கட்டமைப்பு வசதிகள் தயாராக இருக்க வேண்டும்(குறிப்பாக ஊரக, பழங்குடி பகுதிகளில்) என்றும்அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சக செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலின் தலைமை இயக்குநர், எட்டு மாநிலங்களின்தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைமை இயக்குநர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுற்றுலாத் தலங்களில் கொவிட்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் குறித்து உள்துறைச் செயலாளர்ஆய்வு Read More

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்… சசிகலா விளக்கம்

தி வீக், என்ற, ஆங்கில வார இதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் சசிகலா. அதில் ஜெயலலிதா மற்றும் தனக்கு இடையே இருந்த உறவுகள் பற்றி பல்வேறு முக்கிய விஷயங்களை அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். பேட்டியிலிருந்து சில முக்கிய அம்சங்கள்: போயஸ் கார்டனிலிருந்து …

ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்… சசிகலா விளக்கம் Read More

திமுக ஆட்சிக்கு வந்தால் உயிர் தியாகம் செய்வதாக வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்து உயிர்விட்ட அதிகாரி

கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக அதிகாரி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். திமுக ஆட்சி வரவேண்டும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் …

திமுக ஆட்சிக்கு வந்தால் உயிர் தியாகம் செய்வதாக வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்து உயிர்விட்ட அதிகாரி Read More

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று (10.07.2021)  நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் …

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் Read More

125 வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்

வேலூரில் 125 ஆவது சிப்பாய் புரட்சி நினைவுதினத்தில் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி

125 வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் Read More