இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திருபிரகலாத் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் திரு மனோகர்லால் கட்டார் சுற்றுலா தொடர்பான திட்டங்களின் மேம்பாடுகுறித்த கூட்டத்தை நடத்தினர். புது தில்லியில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில்ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலாதொடர்பான திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும்விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் சுற்றுலா செயலாளர் திரு அரவிந்த் சிங், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணைச்செயலாளர்கள், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கிருஷ்ணா சர்க்யூட் திட்டம்-2 குறித்த தகவல்களைகூட்டத்தின் போது மாநில அரசு வழங்கியது. ஸ்ரீமத் பகவத்கீதை, மகாபாரதம் (குருச்சேத்திரம்) உள்ளிட்ட முக்கியசுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள் தொடர்பானஉள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு Read More

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு.

சென்னை மாநகர காவல்துறையின் பத்திரிக்கை தொடர்பு உதவி ஆணையராக பதவி வகித்து வந்த பாஸ்கர், சென்னை திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாஸ்கர் சென்னை திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பதவி ஏற்றுக் கொண்டார்.

திருவல்லிக்கேணி உதவி ஆணையராக பாஸ்கர் பதவி ஏற்பு. Read More

ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

கொரோனா பரவலுக்கு முன்பே, மத்திய பா.ஜ.க. ஆட்சியின் தவறானகொள்கையால் இந்தியாவில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றன. இதன்பிறகு, கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி கொரோனா காரணமாக பொது முடக்கம்அமல்படுத்தப்பட்ட பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, மோடி அரசின்அக்கறையின்மையால் இன்றைக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் பணியாற்றிய 10 கோடியே 20 லட்சம் பேரின்வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு,சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாகவும், ஏற்றுமதியில் இவற்றின் பங்கு40 சதவீதமாகவும் இருந்தது. அதோடு90 சதவீதம் அமைப்புசாராதொழிலாளர்கள்  பணியாற்றி வந்தனர். இந்த துறையின் வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது.  கொரோனாவின் இரண்டாவது அலையின் போது குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைநிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. இரண்டாவது அலைதொடங்கிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்தநிறுவனங்கள் மேலும் சீரழிவைச் சந்தித்தன. முதல் அலையின் போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால்அறிவிக்கப்பட்ட சலுகைகள் பாதி அளவுக்குக்கூட நிறைவேறவில்லை. அதேபோல, இப்போதைய அறிவிப்புகளும் எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிலைமை என்ன என்பது குறித்ததரவுகளோ, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளோ மத்திய அரசிடம் இல்லை. இந்தியாவில் குறு, சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாகஇருப்பதாகவும், இதில் 40 சதவீத நிறுவனங்கள் நிதி ஆதாரம் இன்றி இருப்பதாகவும் இந்த மாத தொடக்கத்தில் உலக வங்கி அறிவித்த பிறகு 500 மில்லியன் டாலர் அளவுக்கு உதவித் திட்டத்தை மத்திய அரசுஅறிவித்தது. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாதந்தோறும்மூடப்பட்ட வருவதால், பலரும் வேலை இழந்து வருகின்றனர். உத்தரவாதம் இல்லாத கடனாக ரூ 3 லட்சம் கோடியை இந்தநிறுவனங்களுக்கு வழங்குவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசுஅறிவித்தது. ஆனால், அதில் பாதி அளவு கூட வழங்கப்படவில்லை. நாடுமுழுவதும் 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. இதில் பதிவு செய்யப்பட்டவை 25 லட்சத்து 13 ஆயிரம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் 60 சதவீதம்தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள்கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு கைவிட்டதால், தமிழகத்தில் 44 சதவீத குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டைநிறுத்தியுள்ளன. 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள்மட்டுமே நிதி தொகுப்பைப் பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடப் பலதிட்டங்களை மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாநில அரசுகளுடன்இணைந்து செயல்படுத்தி, மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தநிறுவனங்களையும், இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம்பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுமீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். வழக்கம்போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைஅணுகாமல், தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (கே.எஸ். அழகிரி)

ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை மேற்கொள்ள வெங்கையா நாயுடு அறியுறுத்தினார்

நாட்டின் நலன்களைக் காயப்படுத்துவதற்காக தீவிரவாதிகள் மேற்கொள்ளும் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளைக் கண்டறியுமாறு ஆராய்ச்சி சமூகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை இந்திய தொழில்நுட்பக் …

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை மேற்கொள்ள வெங்கையா நாயுடு அறியுறுத்தினார் Read More

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல்

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட்-19தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஊடக செய்திகள் வெளியிட்டிருப்பதோடு,  இந்தத் தடுப்பூசிகளை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசிகளும் ஆண்கள் அல்லது பெண்களிடையே மலட்டுத்தன்மையை …

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல் Read More

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான …

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு Read More

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல்

காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக காவல்த்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை …

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல் Read More

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ்

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா. ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற …

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ் Read More

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிய இருந்தன் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை …

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் Read More