இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் …

இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளில்ஈடுபடுவதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் தபார் கப்பல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பைமேம்படுத்தும் நோக்கில் தனது பயணத்தை ஜூன் 13 அன்றுதொடங்கியுள்ள இந்திய கடற்படை கப்பலான தபார், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறுதுறைமுகங்களுக்கு செப்டம்பர் இறுதி வரை பயணம்மேற்கொள்ளும். இந்த பயணத்தின் போது, பணிரீதியான, சமூக மற்றும்விளையாட்டு  நிகழ்ச்சிகளை தபார் நடத்தும். நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளிலும்ஐஎன்எஸ் தபார் ஈடுபடும்.  ஏடன் வளைகுடா, செங்கடல், சூயஸ் கால்வாய், மெடிட்டெரேனியன் கடல், வட கடல் மற்றும் பால்டிக் கடல்ஆகிய பகுதிகளை தனது பயணத்தின் போது ஐஎன்எஸ்தபார் கடந்து செல்லும். டிஜிபவுட்டி, எகிப்து, இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து, மொராக்கோமற்றும் ஆர்க்டிக் கவுன்சில் நாடுகளான சுவீடன் மற்றும்நார்வே ஆகியவற்றின் துறைமுகங்களுக்கும் தபார்பயணம் மேற்கொள்ளும். தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளின்கடற்படைகள் உடனான நிகழ்ச்சிகளை தவிர, ராயல்கடற்படை, பிரான்சு கடற்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்புகடற்படை ஆகியவற்றுடன் கூட்டு பயிற்சிகளிலும்இக்கப்பல் ஈடுபடும். ஜூலை 22 முதல் 27 வரை ரஷ்யகடற்படை தின கொண்டாட்டங்களிலும் ஐஎன்ஸ் தபார்கலந்து கொள்ளும். ராணுவ உறவுகள், கூட்டு செயல்பாடு மற்றும் நீண்டகாலதிட்ட நீட்டிப்பு உள்ளிட்டவற்றை கட்டமைப்பதற்காக நட்புநாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இக்கப்பல்செயல்படும்.

நட்புநாடுகளின் கடற்படைகளோடு கூட்டு பயிற்சிகளில்ஈடுபடுவதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் தபார் கப்பல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது Read More

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 வகையின்பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 தொற்று வகைகண்டறியப்பட்டுள்ள மதுரை, சென்னை மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்களில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் வெஇறையன்புவிற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன்எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா பிளஸ், கவலை அளிக்கக்கூடியதொற்று வகை என்று  மரபியலுக்கான இந்திய கொரோனாகூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளதை அடுத்து, அதனைக்கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகமேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வகைத் தொற்று, அதிகமாகப் பரவுவதுடன், நுரையீரலைபாதித்து, மோனோக்ளோனல் என்ற நோய் எதிர்ப்பொருளின் ஆற்றலைக் குறைக்கும்  தன்மை கொண்டது என்று திரு பூஷன்கூறியுள்ளார். இது சம்பந்தமாக பொது சுகாதார நடவடிக்கைகள் மேலும்தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்கள் மற்றும் தொகுப்புகளில் கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்துவது; தடமறிதல், தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றநடவடிக்கைகள் முன்னுரிமையின் அடிப்படையில்மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரு பூஷன் குறிப்பிட்டுள்ளார். மருத்துவத் தொற்று நோயின் தொடர்பை கண்டறிவதற்கு ஏதுவாகதொற்றுக்கு ஆளாகும் நபர்களின் போதிய மாதிரிகள்மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் சுகாதார செயலாளர், மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொவிட்-19 வகையின்பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது Read More

கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க இந்திய அரசுக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம்.

தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்தி, மூன்றாம் அலை பெருமளவில் மக்களைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற  எண்ணத்துடன் நாடே நகர்ந்துக் கொண்டிருக்க, கர்ப்பிணி பெண்களின் நலன் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எப்போதுமே …

கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க இந்திய அரசுக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம். Read More

இந்தியாவில் அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் புதிய நேனோ மின்னியற்றிகள்உருவாக்கம்

எளிதான, குறைந்த செலவில், உயிரி– இணக்கமுடைய, ஒளிஊடுருவும் நேனோ மின்னியற்றியை விஞ்ஞானிகள்உருவாக்கியுள்ளார்கள். ஒளி மின்னணுவியல், சுயமாகஇயங்கும் உபகரணங்கள் மற்றும் இதர உயிரி மருத்துவசெயல்முறைகளில் பயன்படுத்தும் வகையில் சுற்றியுள்ளஅதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்வகையில் இந்த நேனோ மின்னியற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல், எரிசக்தி பற்றாக்குறை முதலியஅச்சுறுத்தல்களால், கரியமில வெளியீடுகள் குறைவாகஇருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் தேவைஅதிகரித்துள்ளது. தொடு திரைகள், மின்னணு காட்சிமுறைகள் முதலிய கருவிகளில் மரபுசாரா முறையில்மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும்பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்மையானபொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் சங்கர் ராவ்மற்றும் அவரது குழுவினர், டாக்டர்ஸ் பிளேட் என்றதொழில்நுட்பத்தில் தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன், பாலிஎதிலீன் டெரிஃப்தலேட்டைப் பயன்படுத்தி இந்தடிரைபோ மின்னணு நேனோ மின்னியற்றியைவடிவமைத்துள்ளனர்.மென்மையாக கைகளைத் தட்டுவதன் மூலம் 11 எல்இடிவிளக்குகளுக்கு இந்த உபகாரணத்தால் ஒளியூட்ட முடியும்.

இந்தியாவில் அதிர்வுகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் புதிய நேனோ மின்னியற்றிகள்உருவாக்கம் Read More

இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்ககுடியரசு துணைத் தலைவர் அழைப்பு; சோழமன்னர்கள் குறித்து பெருமிதம்

நாட்டின் லட்சியமிக்க இலக்குகளை எட்டுவதில்துறைமுகங்களுக்கு உள்ள முக்கிய பங்கு குறித்து விளக்கியகுடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்க  அழைப்புவிடுத்தார். விசாகப்பட்டினத்தில் குடியரசு துணைத் தலைவர் உடனானஉரையாடலின் போது, விசாகப்பட்டினம் துறைமுகபொறுப்பு கழகத்தின் தலைவர் திரு கே ராம மோகன ராவ்மற்றும் இதர மூத்த அதிகாரிகள் விளக்கக்காட்சி ஒன்றைவழங்கினர். விரிவாக்கத் திட்டங்கள் உள்பட துறைமுகத்தின்பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குடியரசு துணைத்தலைவரிடம் அவர்கள் விளக்கினர். அப்போது பேசிய திரு நாயுடு, சுமார் 7,517 கிலோ மீட்டர் நீளகடற்கரை மற்றும் 200-க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் சிறுதுறைமுகங்களுடன், உலகின் முக்கிய கப்பல்வழித்தடங்களில் இந்தியா இடம் பெற்றிருப்பதாககூறியதோடு, இந்திய பொருளாதாரத்தில் இந்ததுறைமுகங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். பண்டைய இந்தியா மிகப்பெரிய கடல்சார் சக்தியாகதிகழ்ந்ததாக நினைவுக்கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், சோழ மற்றும் கலிங்க மன்னர்கள் பெருங்கடல்களைஆண்டார்கள் என்றும் அத்தகைய நிலையை நாம் மறுபடியும்எட்ட வேண்டும் என்றும் கூறினார். நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்துபேசிய அவர், லட்சியம் மிகுந்த சாகர்மாலா திட்டத்தின் ஒருபகுதியாக 504-க்கும் அதிகமான திட்டங்கள் துறைமுகம்சார்ந்த மேம்பாட்டு வாய்ப்புகளுக்காக அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும்,3.57 லட்சம் கோடி ரூபாய்க்கும்அதிகமான உள்கட்டமைப்பு முதலீட்டை இந்த திட்டங்கள்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 குறித்து பேசிய குடியரசுதுணைத் தலைவர், செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில்சர்வதேச சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறுகேட்டுக்கொண்டார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 எட்டமுடியாத ஒன்று அல்ல என்று தெரிவித்த அவர், இந்தியாவிடம் அறிவின் சக்தி இருப்பதாகவும் ஒன்றுபட்டநோக்கத்துடன் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்றும்கூறினார்.

இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்ககுடியரசு துணைத் தலைவர் அழைப்பு; சோழமன்னர்கள் குறித்து பெருமிதம் Read More

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையாவை நியமித்தார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். 26-06-2021 அன்று நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, …

மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையாவை நியமித்தார் கமல்ஹாசன் Read More

திரையரங்கு பிரதிநிதிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை உதயநிதிஸ்டாலின் வழங்கினார்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் ஆகியோர் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators …

திரையரங்கு பிரதிநிதிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை உதயநிதிஸ்டாலின் வழங்கினார் Read More

மத வழிபாடு நடத்த அனுமதி அளித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்

கொரோனா பெருந்தொற்று ஒன்றியஅரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல்தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில்நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள …

மத வழிபாடு நடத்த அனுமதி அளித்தார் முதல்வர் மு க ஸ்டாலின் Read More

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனேவிடுதலை செய்ய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்

திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில்ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப்பிறந்த “குற்றத்திற்காக”! ஆம்! அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த 78 பேரும் உரியகடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்தகுற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோதளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக்காலத்தை முடித்தவர்கள். இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில்குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக(அகதிகளாக) ஏற்கப்பட்டவர்கள். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களைஅக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில்அனுப்பி வைக்கலாம். மேற்கண்ட வகைகளில் தங்களை விடுவிக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ளஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்துமுழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமதுஅலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடுஅரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில்கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசுசெய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்றுகூறிக் கொண்டு போராடுகிறார்கள். அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்புமுகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிடவேண்டும் என முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம்சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனேவிடுதலை செய்ய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள் Read More