“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங்

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் நடித்துள்ள திரைப்படம்இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகை ரித்திகா சிங் பேசும்போது, இன் கார்படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண்எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்தகதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்படம்ஏற்படுத்தியது.என்றார்.************

இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது… “இன் கார்படம் என் வாழ்வில், என் உறவினர் ஒருவருக்குநடந்த சம்பவத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும், இந்தியா முழுக்க நடந்துகொண்டே இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப்பயணிகள் பலர், பல துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள்பலரும் இது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமே செய்திகளில் தினமும் இது போன்றவிஷயங்களைக் கடந்து போகிறோம். இது ஏன் நடக்கிறது. இதை செய்பவர்கள் மிக இயல்பானவாழ்க்கை வாழும் மனிதர்கள், அவர்களுக்கு குடும்பம் இருக்கிறது, நம்மைப்போல் தான் அவர்களும். எதுஅவர்களை இது போன்ற குற்றங்களைச் செய்ய வைக்கிறது. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குஆளாக்கப்படும் பெண் என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் அந்த நொடி எத்தனை மன ரீதியானபிரச்சனைகளைத் தரும்,  இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதேஇன் கார்“. இதுஅனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறோம்உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர்கள் :  ரித்திகா சிங் சந்தீப் கோயத் மனிஷ் ஜான்ஜோலியா ஞான பிரகாஷ்

தொழில்நுட்ப குழு :  தயாரிப்பு நிறுவனம் : Inbox Pictures  தயாரிப்பு : அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி எழுத்து இயக்கம் : ஹர்ஷ் வர்தன் ஒளிப்பதிவு : மிதுன் கங்கோபாத்யாய் எடிட்டர்: மாணிக் திவார் சண்டைப்பயிற்சி : சுனில் ரோட்ரிக்ஸ் மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM )