“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக ஒரு கதையை தயாரிக்கிறார். இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை. சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது. 1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தின் கதையாக மாற்றியுள்ளது. பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார். மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடை பெற்று வருகிறது.
மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை
