சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும்’ பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழாவில் பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிரஞ்சீவியும், இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.********
நடிகர்கள் : சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்
தொழில்நுட்பக் குழு : எழுத்து& இயக்கம் : பாபி கொல்லி தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்இசை : எஸ். தமன் திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன் படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன் தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி வசனங்கள் – பானு & நந்து நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா

