கனடாவில் பிரபல பக்திப் பாடகி கமலா அவர்களை வரவேற்ற உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம் அவர்கள்

தமிழ்நாட்டின் பிரபல பக்திப் பாடகி கோவை கமலா அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். அவர்களை கனடாவில் வெளிவரும் பிரபல “உதயன்” வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் வரவேற்றார். எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ.காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. தலைவர் பிரபாகரன் அவர்களைப் போற்றிப்பாடும் ‘ராஜகோபுரம் எங்கள் தலைவன்’ என்ற அற்புதமான பாடலின் கம்பீரமான குரலுக்கு இவர் சொந்தக்காரி. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் தேனிசைச் செல்லப்பா அவர்கள் ஆவார்.