ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் “காந்தாரி”.

மசாலா பிக்சர்ஸ்  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணண் தயாரித்து, இயக்க,   நடிகை ஹன்சிகா மோத்வானி இரட்டை வேடத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், “காந்தாரி  திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் மெட்ரோ ஷிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என  இரட்டை வேடத்தில், நடிக்கிறார். நரிக்குறவப்பெண்ணாக நடிப்பதற்காக சிலபயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்குப் பெயர்சொல்லும் படமாக இருக்கும்.********

படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படத்தினைகோடை விடுமுறையை குடும்பங்களோடு  கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படக்குழு திட்டமிட்டுள்ளது.